புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த பிரேரணை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த பிரேரணை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த பிரேரணை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2019 | 7:21 am

Colombo (News 1st) புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில், இன்று (25) ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

சபை அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

2016ஆம் ஆண்டிலேயே புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், மக்களின் கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அரசியலமைப்புச் சபையிடம் அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான அறிக்கையை, நடவடிக்கைக் குழு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது.

எனினும், இதுவரை குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் நிலவுகின்ற நிலையிலேயே இன்றைய தினம் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்