பங்களாதேஷுக்கு எதிரான தொடருக்கான இலங்கை குழாம்

பங்களாதேஷுக்கு எதிரான தொடர்: இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது

by Staff Writer 25-07-2019 | 2:06 PM
Colombo (News 1st) பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கைக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன செயற்படவுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில், முதல் போட்டிக்காக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க உள்வாங்கப்பட்டுள்ளார். அந்தப் போட்டியின் பின்னர் ஒருநாள் போட்டிகளிலிருந்து லசித் மாலிங்க ஓய்வு பெறுவதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டிகளுக்காக தசுன் ஷானக்க அழைக்கப்பட்டுள்ளார். குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, ஷெஹான் ஜயசூரிய, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, வனிந்து ஹசரங்க, அகில தனஞ்சய, நுவன் பிரதீப், லஹிரு குமார, திசர பெரேரா, இசுறு உதான மற்றும் கசுன் ராஜித ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ள ஏனைய வீரர்களாவர். நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க மற்றும் லக்‌ஷான் சந்தகேன் ஆகியோர் குழாத்தில் இணைக்கப்படவில்லை. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (26) ஆரம்பமாகவுள்ளது.