Blue Mountain மோசடி: அரசாங்கம் தலையிட முடியாதா?

Blue Mountain மோசடி: அரசாங்கம் தலையீடு செய்ய முடியாதா?

by Staff Writer 24-07-2019 | 8:14 PM
Colombo (News 1st) சொத்துக்களை விற்பனை செய்யும் போர்வையில் Blue Mountain நிறுவனம் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படும் பாரிய மோசடி தொடர்பில் கடந்த சில நாட்களாக நியூஸ்ஃபெஸ்ட் தகவல்களை வௌிக்கொணர்ந்து வருகிறது. இந்த மோசடி தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள பாதிக்கப்பட்ட நபர்கள் விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகின்றனர். Blue Mountain நிறுவனம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொத்துக்களை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்று, பின்னர் அவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்காக நியாயத்தை நிலைநாட்ட அரசாங்கத்தினால் தலையீடு செய்ய முடியாதா?