செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-07-2019 | 6:04 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை கொண்டுவந்தவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 02. ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய தகவல்களை வழங்கியவருக்கு சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 03. அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த அல்லது இலங்கை மருத்துவ சபை ஊடாக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு இலங்கையில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 04. கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையில் தற்காலிகமாகக் கடமையாற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர். 05. தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் 9 நாட்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 06. 2019ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 07. தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவாகியுள்ளார். 02. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 03. 2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.