மலேசியாவில் கடாரம் கொண்டான் படத்திற்கு தடை

மலேசியாவில் கடாரம் கொண்டான் படத்திற்கு தடை

மலேசியாவில் கடாரம் கொண்டான் படத்திற்கு தடை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Jul, 2019 | 3:19 pm

Colombo (News 1st) விக்ரம் மற்றும் அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உலகலாவிய ரீதியில் வெற்றிநடை போடுகின்ற ‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மலேசிய தணிக்கைக் குழுவின் உத்தரவின்படி, படத்தை வௌியிட முடியவில்லை என, ‘கடாரம் கொண்டான்’ படத்தை மலேசியாவில் வௌியிடவிருந்த Lotus Five Star நிறுவனம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் படத்தில் மலேசிய காவலர்கள் சிலர் குற்றவாளிகளுக்கு உதவுவது போன்ற காட்சிகள் காணப்படுவதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது மலேசியாவிலுள்ள விக்ரமின் ரசிகர் கூட்டத்திற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்