புகலிடக்கோரிக்கையாளர்களை மட்டுப்படுத்தும் தீர்ப்பிற்கு எதிராக குவாத்தமாலா ஜனாதிபதி ​மேன்முறையீடு

புகலிடக்கோரிக்கையாளர்களை மட்டுப்படுத்தும் தீர்ப்பிற்கு எதிராக குவாத்தமாலா ஜனாதிபதி ​மேன்முறையீடு

புகலிடக்கோரிக்கையாளர்களை மட்டுப்படுத்தும் தீர்ப்பிற்கு எதிராக குவாத்தமாலா ஜனாதிபதி ​மேன்முறையீடு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Jul, 2019 | 11:42 am

Colombo (News 1st) அமெரிக்க எல்லைக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை மட்டுப்படுத்தும் வகையிலான நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலஸ் (Jimmy Morales) மேன்முறையீடு செய்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினால், அமெரிக்காவுடனான நல்லுறவுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என ஜனாதிபதி ஜிம்மி மொரலஸ் கூறியுள்ளார்.

குவாத்தமாலாவின் பொருட்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குவாத்தமாலா அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது சட்டத்திற்கு முரணானது எனவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜிம்மி மொரலஸ் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்