பாதாள உலகக்குழுவினருடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகநபர் அளுத்கமயில் கைது

பாதாள உலகக்குழுவினருடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகநபர் அளுத்கமயில் கைது

பாதாள உலகக்குழுவினருடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகநபர் அளுத்கமயில் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2019 | 3:36 pm

Colombo (News 1st) மாகந்துரே மதுஷ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகநபர் ஒருவர் அளுத்கம – அருணலு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு தர்கா நகரைச் சேர்ந்த 36 வயதுடைய சஞ்சீவ புஷ்பகுமார என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் கொலைகளுக்கு நிதி வழங்கியிருக்கலாம் எனவும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்