பட்டதாரிகளை பயிலுனர் பட்டதாரிகளாகப் பயிற்சியளிக்கத் தீர்மானம்

பட்டதாரிகளை பயிலுனர் பட்டதாரிகளாகப் பயிற்சியளிக்கத் தீர்மானம்

பட்டதாரிகளை பயிலுனர் பட்டதாரிகளாகப் பயிற்சியளிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2019 | 1:31 pm

Colombo (News 1st) அரச நிறுவனங்களில், 16 800 பட்டதாரிகளைப் பயிலுனர் பட்டதாரிகளாகப் பயிற்சியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பட்டதாரிகள் அனைவரும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கட்டம் கட்டமாக எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் அடுத்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளிலும் மாவட்ட மட்டத்தில் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பட்டதாரி பயிலுனர்களாக உத்தியோகபூர்மாக நியமிக்கப்படவுள்ளதாக, அமைச்சின் செயலாளர் வே. சிவஞானஜோதி தெரிவித்துள்ளார்.

பட்டம் வழங்கப்பட்ட திகதி உள்ளடங்கலான காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டதாரிப் பயிலுனர்களில் வட மாகாணத்தில் 1 907 பட்டதாரிகளுக்கும் கிழக்கு மாகாணத்தில்
1 142 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்