நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

எழுத்தாளர் Bella Dalima

24 Jul, 2019 | 4:51 pm

Colombo (News 1st) வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயதான நுவன் குலசேகர இலங்கை அணிக்காக 184 ஒரு நாள் போட்டிகளில் 21 டெஸ்ட் போட்டிகளிலும் 58 சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் இவர் 199 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

2014 -இல் இலங்கை அணி T20 உலகக்கிண்ணத்தை வென்றபோது இவர் முக்கியப் பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒருநாள் பந்து வீச்சாளர்களுக்கான நிரல்படுத்தலில் 2009 ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்த சிறப்பும் நுவன் குலசேகரவிற்கு உள்ளது.

இறுதியாக அவர் இலங்கை அணிக்காக 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

பங்களாதேஷ் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடர் ஆரம்பமாகின்றது.

இந்த போட்டியின் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக லசித் மலிங்க ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது சர்வதேசப் போட்டிகளுக்கான ஓய்வை நுவன் குலசேகரவும் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்