by Staff Writer 24-07-2019 | 11:18 AM
Colombo (News 1st) பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து டி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமற்போனமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிகள் காணாமற்போனமை தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் கடமைநேர பொறுப்பதிகாரியினால், துப்பாக்கிகள் தொடர்பாக முன்னெடுத்த பரிசோதனைகளின் போதே, T56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமற்போயுள்ளமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.