காற்றுடனான வானிலையால் மூவாயிரத்துக்கும் அதிக கட்டடங்கள் சேதம்

காற்றுடனான வானிலையால் மூவாயிரத்துக்கும் அதிக கட்டடங்கள் சேதம்

காற்றுடனான வானிலையால் மூவாயிரத்துக்கும் அதிக கட்டடங்கள் சேதம்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2019 | 9:58 am

Colombo (News 1st) நாட்டில் நிலவிய காற்றுடனான வானிலையால், வீடுகள் உள்ளிட்ட 3 600 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 3 500 வீடுகள் அடங்குவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றில் நுவரெலியா, மாத்தறை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக வீடுகள் சேதமடைந்துள்ளதாக, நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜ குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்காக 10,000 ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில், பிரதேச செயலகத்தினூடாக மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இடர்களினால் சேதமடைந்த உடமைகளுக்காக இழப்பீடு வழங்குதல் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 26.9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்