கர்நாடக முதல்வர் குமாரசாமி இராஜினாமா

கர்நாடக முதல்வர் குமாரசாமி இராஜினாமா

கர்நாடக முதல்வர் குமாரசாமி இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2019 | 8:03 am

Colombo (News 1st) கர்நாடக சட்ட மன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர் மாநில ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்த அவர், தனது இராஜினாமாக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.

குமாரசாமியின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் நிறைவடையும் வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று (23) இரவு 7.15 மணியளவில் மாநில சட்ட மன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்ததுடன், அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்துள்ளனர்.

3 நாட்களாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றதுடன் பல தடவைகள் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கர்நாடக மாநில பாஜக வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ”இது கர்நாடக மக்களுக்கு கிடைத்த வெற்றி” என குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு, கர்நாடகாவில் 425 நாட்கள் மாத்திரமே ஆட்சியில் நீடித்துள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை 1952 ஆம் முதல் இதுவரை 4 முதலமைச்சர்கள் மாத்திரமே 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்