2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு

2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு

2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jul, 2019 | 3:38 pm

2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலவில் மனிதன் முதன்முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் இந்த புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ (Artemis) என பெயரிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் Artemis 1 விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார் என நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளித்துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்