by Staff Writer 23-07-2019 | 8:01 PM
Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றது.
விஜேராமயிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும் அமெரிக்க தூதுவரும் சுமார் 20 நிமிடங்கள் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.