வெனிசூலாவின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகத் தடை

வெனிசூலாவின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகத் தடை

வெனிசூலாவின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகத் தடை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Jul, 2019 | 9:10 am

Colombo (News 1st) வெனிசூலாவில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நாட்டின் 23 மாநிலங்களில் குறைந்தது 18 மாநிலங்களில் மின்விநியோகத் தடை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கரகாசிலுள்ள மின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மின்சார சபை கூறியுள்ளது.

மின்தடை காரணமாக தலைநகரில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவொரு மின்காந்தத் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜோர்ஜ் ரொட்ரிகியூ, வழமை நிலைக்குக் கொண்டுவரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதுபோன்ற மின்தடை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்