வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம்

வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம்

வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2019 | 5:17 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய தகவல்களை வழங்கியவருக்கு சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அம்பாறையில் இரண்டு வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம் வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய, ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் வீடொன்றில் இருந்து பாரிய அளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

இதேவேளை, நிந்தவூர் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இரண்டு தகவல்களையும் வழங்கியமைக்காக 50 இலட்சம் ரூபா நிதியை தகவல் வழங்கியவருக்கு சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்