தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தது

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தது

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தது

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2019 | 7:06 am

Colombo (News 1st) தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பில் நாடளாவிய ரீதியில் சுமார் 26 000 ஊழியர்கள் பங்கேற்றதாக, தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை, நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதால் தபால் ஊழியர்கள் சேவைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றை இன்றைய தினத்திற்குள் விநியோகிப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்