சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தல்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தல்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தல்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2019 | 2:02 pm

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 5 இலங்கையர்கள், இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த குறிப்பிட்டுள்ளார்.

படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இவர்களின் புகலிடக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள ஐவரும் குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்