கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2019 | 12:08 pm

Colombo (News 1st) கொழும்பு 3, 4, 5, 6 மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளுக்கு இன்று (23) மாலை 6 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொடிகாவத்த, முல்லேரியாவ, இரத்மலானை, சொய்சாபுர வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகளுக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்