கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸிம்பாப்வே வீரர் சொலமன் மிரே அறிவிப்பு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸிம்பாப்வே வீரர் சொலமன் மிரே அறிவிப்பு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸிம்பாப்வே வீரர் சொலமன் மிரே அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2019 | 2:23 pm

Colombo (News 1st) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சொலமன் மிரே (Solomon Mire) அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பை அவர் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டிகளின் பின்னர், தமது ஓய்வு குறித்து சக வீரர்களிடமும் அதிகாரிகளிடமும் கலந்துரையாடியதாக சொலமன் மிரே தெரிவித்துள்ளார்.

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போதுள்ள நிலையில், ஓய்வு பெறுவதையிட்டு கவலையடைவதாகவும் சொலமன் மிரே தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மிரே 47 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 9 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்