உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2019 | 8:27 am

Colombo (News 1st) 2019ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள், நாளை (24) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனுமதி அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்