குருணாகல் வைத்தியரின் அடிப்படை உரிமை மனு பரிசீலனை

குருணாகல் வைத்தியரின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

by Staff Writer 22-07-2019 | 7:53 PM
Colombo (News 1st) தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி குருணாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 6ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே மற்றும் எல்.ரி.பீ. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இன்று, குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பிரதிவாதிகளுக்கு இதுவரை அறிவித்தல் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் மன்றில் இன்று ஆஜராகிய பிரதி சொலிஷிஸ்டர் ஜெனரல் துஷித் முதலிகெ அறிவித்துள்ளார். சந்தேகநபரான தமது கட்சிக்காரர் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி தடுப்புக் காவலில் வைக்கப்படாது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி பாயிஸ் முஸ்தப்பா உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்