சோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு

சோளத்தின் கொள்வனவு விலை அதிகரிப்பு

by Staff Writer 22-07-2019 | 2:49 PM
Colombo (News 1st) தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதாக, கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். தற்பொழுது சோளத்திற்கு சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சோளத்தின் விலை தற்போது 45 ரூபாவாக காணப்படுவதுடன், அதனை 50 ரூபாவால் அதிகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.