கெய்ரோவுக்கான விமானங்கள் இரத்து

கெய்ரோவுக்கான பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்கள் இரத்து

by Staff Writer 21-07-2019 | 11:03 AM
Colombo (News 1st) பாதுகாப்பு காரணங்களுக்காக எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கான விமானங்களை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இரத்து செய்துள்ளது. ஒரு வார காலத்திற்கு பிரித்தானியாவின் விமானங்கள் எகிப்துக்கு பயணிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தவகையான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பது தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இதுவரை வௌியிடவில்லை. இதேவேளை, தமது விமானங்கள் இரத்து செய்யப்பட்டமை குறித்து பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை என, கெய்ரோ விமான நிலையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நேற்றைய தினம் ஜேர்மனியின் லுப்தான்சா நிறுவனமும் கெய்ரோவுக்கான விமானங்களை இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.