கடும் காற்று: ஆயிரத்துக்கும் அதிக கட்டடங்கள் சேதம்

காற்றுடனான வானிலையால் ஆயிரத்துக்கும் அதிக கட்டடங்கள் சேதம்

by Staff Writer 21-07-2019 | 10:31 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இவற்றில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜ குறிப்பிட்டுள்ளார். சேதமடைந்த கட்டடங்களுள் 50 க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக சமிந்த பதிராஜ குறிப்பிட்டுள்ளார். சேதமடைந்த கட்டடங்களின் நிமித்தம் நேற்று (20) வரை 20 மில்லியன் ரூபா நிதியுதவி தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனைத் தவிர பகுதியளவில் சேமதடைந்த வீடுகளுக்காக, மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகவும் முதற்கட்ட நிவாரணத்திற்காகவும் 8 மாவட்டங்களுக்கு 8.3 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.