ரத்கம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ரத்கம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ரத்கம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2019 | 7:42 am

Colombo (News 1st) ரத்கம – மலீதூவ, கெகில்ல முச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (20) 9.20 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வெவதெனிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்