எண்ணெய்த் தாங்கிக் கப்பல் கைப்பற்றல் தொடர்பில் பிரித்தானியா விமர்சனம்

எண்ணெய்த் தாங்கிக் கப்பல் கைப்பற்றல் தொடர்பில் பிரித்தானியா விமர்சனம்

எண்ணெய்த் தாங்கிக் கப்பல் கைப்பற்றல் தொடர்பில் பிரித்தானியா விமர்சனம்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2019 | 9:30 am

Colombo (News 1st) ஈரான் தமது இரண்டு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளமை தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

எவ்வாறாயினும், விபத்து ஏற்பட்டதாலேயே குறித்த கப்பல்களை தாம் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த விளக்கத்தை ஏற்க மறுப்பதாகக் கூறியுள்ள பிரித்தானியா, சர்வதேச நாடுகளின் கப்பல்கள் பயணத்திற்கும் இந்த நடவடிக்கை எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஈரானிய கடல் எல்லைக்குள் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்கா தயாராகியுள்ளது.

இந்த விடயம் குறித்து நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்