15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் காலமானார்

15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் காலமானார்

15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

20 Jul, 2019 | 5:25 pm

டெல்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று மாலை காலமானார்.

1988 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாகப் பதவி வகித்தவர் ஷீலா தீட்சித்.

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் அனுமதிப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 3.55 மணியளவில் அவர் காலமானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்