by Bella Dalima 20-07-2019 | 6:44 PM
பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன், லண்டனை சேர்ந்த பெண்ணைக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக் கானுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள். இவர்களில் மூத்த மகன், ஆர்யன். சமீபத்தில் வெளியான 'தி லயன் கிங்' படத்தில் சிம்பாவுக்கு ஆர்யன் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில், மேற்படிப்பிற்காக லண்டனில் வசித்துவரும் ஆர்யன், லண்டனை சேர்ந்த வலைப்பதிவரைக் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பெண்ணை ஷாருக் கானின் மனைவி கெளரி சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.