by Staff Writer 20-07-2019 | 7:02 PM
Colombo (News 1st) மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இலங்கை சாம்பியனானது.
இந்த தொடருக்கு TV 1 உள்ளிட்ட Champion Networks ஊடக அனுசரணை வழங்கியது.
14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் தொடர் கடந்த ஆறு நாட்களாக தியகமையில் நடைபெற்றது.
சர்வதேச ரீதியிலான பேஸ்போல் தொடரொன்று இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
A குழுவில் போட்டியிட்ட இலங்கை அணி, லீக் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றியீட்டியதோடு அரை இறுதியில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இலங்கை அணி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடியது.
9 இன்னிங்ஸ்களைக் கொண்ட போட்டியை இலங்கை அணி 5-4 என கைப்பற்றி சாம்பியன் மகுடத்தை வென்றது.
இலங்கை அணித்தலைவரான சமீர ரத்நாயக்க மற்றும் ஷஷிக துல்ஷான் ஆகியோர் இன்றைய தினம் அபாரமாகத் திறமையை வெளிப்படுத்தினர்.
தொடரில் விலை மதிப்பு மிக்க வீரருக்கான விருதை ஷஷிக துல்ஷான் வெற்றி கொண்டார்.
மேற்கு ஆசிய பேஸ்போல் தொடரில் இலங்கை அணி 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் தடவையாக சாம்பியனானதும் நினைவுகூரத்தக்கது.