சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2019 | 4:33 pm

Colombo (News 1st) சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரித கதியில் நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்காக 20 மில்லியன் ரூபா நிதியை தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான நிதியம் வழங்கியுள்ளதாக இடர் முகாமைத்து மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.

அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனர்த்தத்தினால் உ யிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கப்படுமெனவும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக முதற்கட்டமாக 10,000 ரூபா நிதியுதவி வழங்கப்படுமெனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார். இதற்காக 90 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்