கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு இளைஞர்கள் இருவர் பலி

கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு இளைஞர்கள் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2019 | 3:59 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் ரயிலில் மோதுண்டு இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 8.40 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை – பொலிகண்டி பகுதியை சேர்ந்த 19 வயதான ஆனந்தசாமி நீலவன் மற்றும் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான செல்வராசா சஜீவன் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்