இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2019 | 4:11 pm

Colombo (News 1st) இலங்கை நிர்வாக சேவையின் தரம் 3-இல் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் போட்டிப்பரீட்சை நடத்தப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், திறந்த போட்டிப்பரீட்சை மூலம் 203 பேரும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலம் 54 பேரும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பங்கள் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்