அனர்த்தங்களின் போது உதவி கோரி பொலிஸாரை அழைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

அனர்த்தங்களின் போது உதவி கோரி பொலிஸாரை அழைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

அனர்த்தங்களின் போது உதவி கோரி பொலிஸாரை அழைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2019 | 4:18 pm

Colombo (News 1st) அனர்த்தங்களின் போது பொதுமக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் 149 பேர் தற்போது தயார் நிலையிலுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைவாக, 0112 454 576 அல்லது 0112 587 229 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்வதனூடாக, அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்