by Staff Writer 19-07-2019 | 10:16 PM
Colombo (News 1st) SOFA அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இவ்வருடத்தில் அரசாங்கம் இணைந்துகொள்ளாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் கடந்த தினமொன்றில் பிரதமரை சந்தித்து ACSA, SOFA மற்றும் MCC ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடிய போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்
இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு இணங்க இந்த வருடத்தில் எவ்வித பாதுகாப்பு ஒப்பந்தங்களும் உள்ளடக்கப்படவில்லை எனவும் சங்கத்தின் பரிந்துரைகளை எழுத்து மூலம் முன்வைக்க பிரதமர் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினமொன்றில் பாராளுமன்றத்தில் பிரதமர் எதிர்வரும் மாதங்களில் SOFA ஒப்பந்தத்தை கைச்சாத்திட முடியாமற்போகும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.