தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

பணிப்பகிஷ்கரிப்பு முடிவு: தேங்கியுள்ள தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 19-07-2019 | 3:54 PM
Colombo (News 1st) மத்திய தபால் பரிமாற்றக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளதுடன், தேங்கியுள்ள தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நேற்றிரவு (18) தபால் ரயில்களில் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படவிருந்த தபால்களை அனுப்ப முடிந்ததாக அவர் கூறியுள்ளார். பல கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நேற்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தது. கோரிக்கைகளுக்கான தீர்வு வழங்கப்படாத பின்புலத்தில் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.