சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2019 | 4:26 pm

Colombo (News 1st) சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கும் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்திற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது.

எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகளில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி பங்கேற்க முடியாது என்பதுடன் அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் நிறுவனத்தில் அரசியல் தலையீடுகள் இல்லையென்பதை உறுதிப்படுத்த தவறிய நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்