ஜப்பான் அனிமேஷன் கலையகத்தில் தீ; 23 பேர் பலி

ஜப்பான் அனிமேஷன் கலையகத்தில் தீ; 23 பேர் உயிரிழப்பு

by Staff Writer 18-07-2019 | 12:44 PM
Colombo (News 1st) ஜப்பானின் கியோட்டோவிலுள்ள (Kyoto) அனிமேஷன் கலையகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 41 வயதான நபர் ஒருவர் தீயைப் பற்ற வைப்பதற்கு முன்னதாக, பெட்ரோலை கலையத்தில் தௌித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த பெயர் வௌியிடப்படாத சந்தேகநபரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சந்தேகநபருக்கும் குறித்த கலையகத்திற்கும் இடையிலான தொடர்பு என்னவென்பது இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவிய 3 மாடிக் கட்டடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.