கழிவுப் பொருட்களைத் திருப்பியனுப்பும் கம்போடியா

பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைத் திருப்பியனுப்பும் கம்போடியா

by Staff Writer 18-07-2019 | 11:52 AM
Colombo (News 1st) சுமார் 1 600 தொன் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை  அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு, கம்போடியா தீர்மானித்துள்ளது. இதேவேளை, தமது நாடு வௌிநாடுகளின் குப்பைத் தொட்டி அல்ல எனவும் கம்போடியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து 70 கொள்கலன்களும் கனடாவிலிருந்து 13 கொள்கலன்களும் கம்போடியாவின் மீன்பிடி கிராமமொன்றிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், இதனை நாட்டிற்குக் கொண்டுவந்த நிறுவனங்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்நாட்டின் சுற்றாடல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மீள்சுழற்சிக்காக, சில மேற்கத்தேய நாடுகள் தமது நாட்டின் பிளாஸ்டிக் கழிவுகளை சீனாவுக்கு அனுப்புகின்றன. எனினும், வௌிநாட்டு கழிவுப் பொருட்களுக்கு சீனா கடந்த வருடம் தடை விதித்திருந்தது. இதேபோன்று, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 450 தொன் கழிவுப்பொருட்களை மலேஷியா கடந்த மே மாதம் திருப்பியனுப்பியமை குறிப்பிடத்தக்கது.