மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 1:43 pm

Colombo (News 1st) நன்னீர் மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலகங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பை செய்வதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மூப்படையும்போது எஞ்சுவது தோணியும் துடுப்பும் மாத்திரமே என்பதால், அவர்களுக்கு ஓய்வூதிய முறையொன்றை முன்மொழிவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்