தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திசாநாயக்க கைது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திசாநாயக்க கைது

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 5:27 pm

Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திசாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Avant Garde Maritime Services நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் போதுமான சாட்சியங்கள் உள்ளமையால், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சமன் திசாநாயக்கவை கைது செய்து காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.

சட்ட மா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (17) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, அவன்ற் கார்ட் வழக்குடன் தொடர்புடைய 8 பிரதிவாதிகளில் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய நான்கு பேரும் வௌிநாட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்