தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 9:11 am

Colombo (News 1st) தபால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (17) மாலை தபால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தமது கோரிக்கைக்கான உரிய தீர்வு வழங்கப்படவில்லை என, கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில்
1 35 000க்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் 35 000க்கும் அதிகமானவை பதிவுத் தபால்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்று (18) மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்