சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு

சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு

சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 4:36 pm

Colombo (News 1st) சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

சுமார் 8 ஏக்கர் காட்டுப்பகுதி தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படுவதன் காரணமாகவே காடழிப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கலவான வனவள உத்தியோகத்தர் M.D.பண்டாரநாயக்கவிடம் வினவியபோது, அந்த தொழிற்சாலைக்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என கூறினார்.

குறித்த பகுதியில் ஆய்வு செய்து, சுற்றாடல் அறிக்கை ஒன்றும் கோரப்பட்டுள்ளதாக வனவள உத்தியோகத்தர் தெரிவித்தார்.

சுற்றாடல் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்