கட்டுநாயக்கவில் 2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன

கட்டுநாயக்கவில் 2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 7:26 pm

Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 250 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தின் CACCT முனையம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் தனியார் நிறுவன வளாகமொன்றில் காணப்படுகின்றமை கடந்த நாட்களில் வௌிக்கொணரப்பட்டது.

தவறுதலாக இந்த கழிவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் தனியார் நிறுவன வளாகத்தை சோதனையிட்ட பின்னர் மத்திய சுற்றாடல் அதிகார சபை நேற்று (17) கூறியிருந்தது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை தவறுதலாக கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறும் இந்த குப்பைகள், 2015 ஆம் ஆண்டு முதல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் தனியார் நிறுவன வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளமை Google Map ஊடாக ஆராயும் போது தௌிவாக புலப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்