ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வருகை

ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வருகை

ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 1:14 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி க்ளெமென்ட் யலெட்ஸோஸி வூல் (Clement Nyaletsossi Voule) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

அமைதியாக ஒன்றுகூடுவதற்குக் காணப்படும் உரிமை தொடர்பில் ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

நாட்டிற்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளார்.

இந்தக் காலப்பகுதிக்குள் அரச பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், வைத்தியர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

விசேட பிரதிநிதி க்ளெமென்ட் யலெட்ஸோஸி வூலின் இந்த விஜயம் தொடர்பில் தயாரிக்கப்படும் அறிக்கை 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் 44ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்