உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 10:57 am

Colombo (News 1st) இந்தத் தடவை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

ட்ரினிடாட் என்ட் டொபாகோ அணியுடன் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதனை உறுதி செய்துள்ளது.

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் இந்தத் தடவை இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெறுகின்றது.

தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஜமைக்கா, உகண்டா, ட்ரினிடாட் என்ட் டொபாகோ மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இரண்டாம் சுற்றில் ஜி குழுவில் இடம்பிடித்துள்ளதுடன், இவற்றில் இரு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவுள்ளன.

இதன்படி, முதல் சுற்று உள்ளிட்ட இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதியை உறுதி செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்