அமெரிக்காவில் அதிக வில்லைகளை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகளில் வீழ்ச்சி

அமெரிக்காவில் அதிக வில்லைகளை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகளில் வீழ்ச்சி

அமெரிக்காவில் அதிக வில்லைகளை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகளில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2019 | 9:44 am

Colombo (News 1st) அமெரிக்காவில் அதிக வில்லைகளை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகள், 1999 ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பின் வீதம் 5.1 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக, அந்நாட்டின் நோய்த்தடுப்புப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

1999ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிக வில்லைகளை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

வலி நிவாரணங்களுக்கு அடிமையாதல் மற்றும் அதிக சக்திமிக்க வில்லைகளை உட்கொள்வதால் இவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகின.

இதேவேளை, அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டில் மாத்திரம் அதிக வில்லைகளை உட்கொண்டமையால், 68 557 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்