பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்

பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது குறித்த தீர்மானம் இன்று

by Staff Writer 17-07-2019 | 7:37 AM
Colombo (News 1st) கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன், பாண் உள்ளிட்ட தமது உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று (17) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமையின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப, பேக்கரி உற்பத்திகளின் விலையை 3 ரூபா முதல் 5 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என, சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை நேற்று முதல் 7 ரூபாவால் அதிகரிப்பதற்கு, பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து விற்பனை முகவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையை 7 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை வரியுடன் சந்தையில் 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கும் என, பிறீமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக 7 மாதங்களுக்கு முன்னர் மாவின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்ததாக, பிறீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.