பெருவின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது  ​

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது ​

by Staff Writer 17-07-2019 | 12:57 PM
Colombo (News 1st) பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ (Alejandro Toledo) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பெரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை மீள ஒப்படைக்குமாறு பெரு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் கேட்டுக் கொண்டதற்கமைய, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட் சட்டத்தரணி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. டொலிடோ, தமது பதவிக்காலத்தில் கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பில் 20 மில்லியன் அ​மெரிக்க டொலர் நிதியைக் கையூட்டாக பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ, இது அரசியல் பழிவாங்கல் எனத் தெரிவித்துள்ளார்.