வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2019 | 8:33 pm

Colombo (News 1st) வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச ஊழியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச ஊழியர்களுக்கான நிரந்த நியமனம் வட மாகாண ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் இணைந்து நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது, கலாசார உத்தியோகத்தர்கள் 4 பேருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 73 பேருக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வட மாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பும் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்